IQ வை அதிகப்படுத்துவது எப்படி?

IQ வை அதிகப்படுத்துவது எப்படி? அறிவு என்பது பொதுவாக சில நிர்ணயிக்கப்பட்ட சோதனைகளால் அளக்கப்படுகிறது. இந்த சோதனை தரும் அளவே இன்டலிஜென்ஸ் கோஷண்ட் அல்லது ஐ.க்யூ என்று கூறப்படுகிறது. ஒரு குழந்தையின் ஐ.க்யூ என்பது எவ்வாறு கூறப்படுகிறது? அந்த குழந்தையின் மன வயதை நிஜ வயதால் வகுத்து வருவதை நூறால் பெருக்க வேண்டும். உதாரணமாக ஒரு பையனின் மன வயது எட்டு என்றும் அவனது நிஜ வயதும் எட்டு என்றால் எட்டை எட்டால் வகுத்து வரும் எண்ணிக்கையான ஒன்றை நூறால் பெருக்கி வருவது நூறாகும்.அதாவது அந்த குழந்தையின் ஐ.க்யூ நூறாகும். இன்னொரு உதாரணம்: ஒரு குழந்தையின் மன வயது 12 என்றும் அவன் நிஜ வயது எட்டு என்றும் வைத்துக் கொண்டால் 12ஐ 8ல் வகுத்து வரும் தொகையான 1.5ஐ நூறால் பெருக்க வருவது 150 ஆகும். அப்போது அந்தக் குழந்தையின் ஐ.க்யூ 150 ஆகும். மன வயது என்பது சில சோதனைகளால் நிர்ணயிக்கப்படுகிறது. அறிவு 17 வயது வரை அதிகரிக்கிறது. பிறகு பொதுவாக குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரிப்பதில்லை. ஆகவே பெரும்பாலான நாடுகளில் ஒரு பையன் 18 வயதில் வயதுக்கு வந்து விட்டவனாக அல்லது முதிர்ச்சி அடைந்தவனாகக் கருதப்படுகிறான். ஆகவே தான்...