WhatsApp இல் அரட்டைகளை இல்லாமல் ஆக்கலாம்!

 

WhatsApp செயலியில், நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தானாக மறைந்து போக செய்யும் புதிய விருப்பத்தை இம் மாதம் அறிமுகப்படுத்துகிறது. 

இந்த அம்சம் மூலம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு நண்பர்களுக்கிடையில் அரட்டை உரையாடல்களை ஏழு நாட்களுக்குப் பிறகு தானாகவே செய்திகளை நீக்க அனுமதிக்கின்றது.

நீங்கள் ஒவ்வொன்றாக தெரிவு செய்து அழிக்கும் சிரமத்தை இது தவிர்க்கின்றது. தனிப்பட்ட அரட்டைகளில் யார் வேண்டுமானாலும் இதனை செயற்படுத்த முடியும், மேலும் குழு நிர்வாகிகள் குழு அரட்டைகளில் மறைந்து போகும் செய்திகளை இயக்க முடியும்.

இவ்வாறு மறைந்து போகும் அம்சத்தை செயற்படுத்தும் போது இது ஏழு நாட்களுக்குப் பிறகு புகைப்படங்களையும் வீடியோக்களையும் அழித்துவிடும், மேலும் இரு தரப்பினருக்கும் செய்திகள் மறைந்து போகும் போது, ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கலாம் அல்லது தானாகவே நீக்கப்படுவதற்கு முன்பு செய்திகளை நகலெடுக்கலாம்.

ஒரு குழுவில் அல்லது தனிஒருவருக்கு இடையில் மறைந்து போகும் செய்திகளை நீங்கள் இயக்க முடியும். இவ் அம்சம் முழுமையாக உருவானதும், வட்ஸ்அப்பில் உள்ள ஒவ்வொரு நண்பரின் தொடர்பு பிரிவில் இது ஒரு புதிய விருப்பமாக கிடைக்கும். 

 


இந்த அமைப்பு பழைய செய்திகளை அழிக்காது, மேலும் புதிய செய்திகளை எந்தவொரு தரப்பினரும் இயக்கியவுடன் மட்டுமே பாதிக்கும். இந்த மாதத்தில் வட்ஸ்அப் நிறுவனம்  பயனர்களுக்கும் இந்த புதிய அம்சத்தை வெளியிடத் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வணிக சேவையான வட்ஸ்அப் பிசினஸுக்காக நிறுவனத்தின் சார்பாக கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண வட்ஸ்அப் போலவே வட்ஸ்அப் வணிகங்களுக்கென பிசினஸ் சேவையும் வழங்கி வருகிறது. இது வட்ஸ்அப் பிசினஸ் என்று அழைக்கப்படும். இது முழுமையாக ஒரு வணிக சேவையாக உள்ளது.

இந்தியாவில் இந்த நடைமுறை அமுலுக்கு வர உள்ளது. எனினும் சாதாரன வட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு, சாதாரண வட்ஸ்அப் சேவையை முன்பு போலவே இலவசமாக பயன்படுத்தலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Agni Siragugal (அக்னிச் சிறகுகள்) - A.P.J. Abdul Kalam

Heat and Electricity MCQ's 1979 - 2016