Agni Siragugal (அக்னிச் சிறகுகள்) - A.P.J. Abdul Kalam

அக்னிச் சிறகுகள் - A.P.J. Abdul Kalam

 
 
 

அக்னிச் சிறகுகள் அப்துல்கலாம் ஐயா அவர்களின் சுயசரிதை. அப்துல்கலாம் ஐயா அவர்கள் குழந்தைப்பருவம் முதல் விஞ்ஞானியாக வளர்ச்சி பெரும்வரை அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை சுயசரிதையாக தொகுத்துள்ளார்.

அப்துல்கலாம் ஐயா அவர்கள் இளமையில் இருந்தே எளிமை, தன்னடக்கம், ஆன்மீகத்தில் ஈடுபாடு போன்றவற்றை பெற்று திகழ்ந்தார். சிறுவயதில் இருந்தே பெற்றோரிடமிருந்து நல்ல பண்புகளையும், அவருடைய நண்பர்களிடமிருந்து ஆன்மீகத்தையும் தெரிந்துகொண்டார். அவர் வாழ்ந்த காலங்களில் புளியங்கொட்டைக்கு தேவை அதிகரிக்கவே அவற்றை எடுத்து விற்றும், புகைவண்டியில் இருந்து வீசப்படும் செய்தித்தாள்களை வீடுகளுக்கு விநியோகித்தும், அண்ணன் கடையில் வியாபாரம் பார்த்தும் தனது சிறுவயது பருவத்தை கடினமான சூழ்நிலைகளால் வென்றார்.

தன் கல்லூரி படிப்பில் இயற்பியல் துறையை தேர்தெடுத்தார். தன்னுடைய தகப்பனார் தன்னை கலெக்டர் ஆக காணவேண்டும் என எண்ணினார். ஆனால் நாளடைவில் தானோ பொறியாளராக வேண்டும் என்று கருதினார். அதற்கு அவருடைய சகோதரி உதவிசெய்யவே அவருடைய திறமையின் மூலம் பொறியாளர் ஆகிறார்.

அவருடைய முயற்சியினால் அவர் பணியில் சேர்கிறார். அதில் அவர் ஒவொன்றிற்கும் எடுக்கும் முயற்சிகளில் எவ்வாறு தோல்வியை சந்திக்கிறார்? எவ்வளவு தோல்வியைக் கண்டாலும் மேலும் மேலும் முயற்சித்து எவ்வாறு வெற்றியை அடைகிறார்? என்பதை பற்றி அறிந்துகொள்ளவும் எவ்வளவு தோல்வியை கண்டாலும் வெற்றி நிச்சயம் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். SLV3 இராக்கெட் உருவானது பற்றியும் அதில் அவருடைய பங்கை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதில் அவருடன் உதவியாய் இருந்த நண்பர்கள் அனைவரையும் குறிப்பிட்டுள்ளர். இதில் காலம் ஐயா அவர்கள் செயற்கைக்கோள் உருவாக்குவதில் காட்டும் காதல் அலாதியானது.

 
 






Comments

Popular posts from this blog