Nelson Mandela (நெல்சன் மண்டேலா) - மருதன்
நெல்சன் மண்டேலா - மருதன்
சே குவரா ,பிடல் காஸ்ட்ரோ ,மால்கம் எஸ்க் போன்ற புரட்சியாளர்கள் வரிசையில் முக்கியமானவர் நெல்சன் மண்டேலா. தமது வாழ்நாளில் பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுடப் போராளியின் வாழ்க்கை. மனிதனுமல்லாத விலங்குமல்லாத ஒரு நிலையில் தென் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். சுதந்திரத்தை அடைய நடைபெற்ற நீண்ட போராட்டத்தில் மண்டேலா அவர்களின் பங்கு அளப்பெரியது. மண்டேலாவின் அமைதிப் போராட்டம் அரசு வன்முறையால் பாதை மாறியபோது, அகிம்சையின் சகாப்தம் முடிந்துவிட்டதை அவர் அறிவித்தார். வரலாற்றின் மிக நீண்ட சிறைவாசியாக, கறுப்பின மக்களின் மீட்பராக, இனஒதுக்கல் எதிர்ப்பாளராக, மனித உரிமைக் காப்பாளராக, மானுடத்தின் அடையாளமாக மண்டேலா இன்று அறியப்படுகிறார்.
Comments
Post a Comment